www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ட்ரீட்.. மரண மாஸ் SK டான்ஸோடு வெளியான மாவீரன் சிங்கிள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Birthday Special Maaveeran Scene ah Scene ah Song Released

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வாத்தி FDFSல் யாத்ரா .. டக்குனு பார்த்தா தனுஷ் மாதிரியே இருக்காருப்பா.. வைரல் வீடியோ

"டான்" படத்துக்கு பின், ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்  கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. Scene ah Scene ah எனும் இந்த சிங்கிள் பாடல் பரத் ஷங்கர் இசையில் அனிருத் குரலில் பாடலாசிரியர் லோகேஷ் & கபிலன் வரிகளில் வெளியாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தாக  இந்த Scene ah Scene ah சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலில் சிவகார்த்திகேயன் நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | அஜித் நடித்த 'துணிவு'.. படம் பார்த்துவிட்டு ஒரே வார்த்தையில் ட்வீட் செய்த தினேஷ் கார்த்திக்..!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Birthday Special Maaveeran Scene ah Scene ah Song Released

People looking for online information on Maaveeran, Maaveeran Scene ah Scene ah Song, Sivakarthikeyan will find this news story useful.