www.garudabazaar.com
iTechUS

"எப்பிறப்பிற்கும் தமிழன் என்ற வரம்..".. இயக்குநர் செல்வராகவன் பொங்கல் வாழ்த்து ட்வீட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய பல படங்களை இயக்கி முக்கிய இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன்.

Selvaraghavan tweet for Pongal 2023 wishes செல்வராகவன்

பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கினார். அண்மையில் மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

சில தினங்களுக்கு முன்னதாக செல்வராகவன் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில்,"“தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” என அவர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  “என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! எப்பிறப்பிற்கும் தமிழன் என்ற வரம் ஒன்று போதும் ! 🤓🤓” என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் செல்வராகவனின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

இயக்குநர் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தமிழ் தொல்பொருள் ஆராய்ச்சி, தமிழ் மன்னர்களுக்கிடையிலான வரலாற்றுச் சுவடுகள், அவர்கள் இழந்த பொக்கிஷமான விஷயங்கள் உள்ளிட்டவற்றை குறித்து பேசுபொருளாக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan tweet for Pongal 2023 wishes செல்வராகவன்

People looking for online information on Pongal 2023, Selvaraghavan will find this news story useful.