www.garudabazaar.com

Bakasuran : செல்வராகவன் நடிப்பில் பகாசூரன்.. பட போஸ்டரை ஒட்டிய இயக்குநர் மோகன்.ஜி .. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ருத்ர தாண்டவம் திரைப்படத்தை தொடர்ந்து மோகன்.G இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Selvaraghavan Bakasuran director Mohan G sticks poster

Also Read | சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண்.. தெலுங்கில் ரிமேக்காகும் சூப்பர்ஹிட் தமிழ்ப்படம்..!

இவர்களுடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பகாசூரன் திரைப்படம், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றி இருந்தார்.

முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பகாசூரன் படம் கல்லூரி பெண்களை மிரட்டியும் அவர்களின் வறுமை சூழலை பயன்படுத்தியும் ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தும் உண்மை சம்பவங்கள் குறித்த தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் உடனடியாக  அதை படமாக்க வேண்டும் என, தானே வாடிக்கையாளராக சென்று அந்த பெண்களை காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்கள் உதவியுடன் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்களில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும், பலரும் இதில் பணத்தை இழந்துள்ளதாகவும், இப்படி பெரும் குற்றப் பின்னணி இதில் உள்ளதாகவும் கூறி மோகன்.ஜி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செல்போன்களை நாம் நம் பிள்ளைகள் நல்லனவற்றுக்காக பயன்படுத்துவதாக நினைப்போம், பெரும்பாலானோர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் பணம் சம்பாதிக்கும் மோகம், தவறுதலான மிரட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு பயந்து இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மொபைல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம் என பேசிய மோகன்.ஜி, அதை பற்றியே பகாசூரன் படம் பேசப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி இப்படத்தின் போஸ்டரை தானே ஒட்டக்கூடிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Also Read | PS1 பொன்னியின் செல்வனை தொடர்ந்து ஜெயம் ரவியின் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? BREAKING அப்டேட்

BAKASURAN : செல்வராகவன் நடிப்பில் பகாசூரன்.. பட போஸ்டரை ஒட்டிய இயக்குநர் மோகன்.ஜி .. வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan Bakasuran director Mohan G sticks poster

People looking for online information on Bakasuran, Mohan g, Selvaraghavan will find this news story useful.