www.garudabazaar.com

PS1 பொன்னியின் செல்வனை தொடர்ந்து ஜெயம் ரவியின் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? BREAKING அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

Jayam Ravi AGILAN Movie releasing on March 10th Deets

Images are subject to © copyright to their respective owners.

Also Read | DADA பாத்துட்டு போன் பண்ணிய தனுஷ்.. கவின் பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்..!!

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

Jayam Ravi AGILAN Movie releasing on March 10th Deets

Images are subject to © copyright to their respective owners.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். 

Jayam Ravi AGILAN Movie releasing on March 10th Deets

Images are subject to © copyright to their respective owners.

விவேக் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் முருகன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

Jayam Ravi AGILAN Movie releasing on March 10th Deets

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மார்ச் 10, 2023 அன்று  வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண்.. தெலுங்கில் ரிமேக்காகும் சூப்பர்ஹிட் தமிழ்ப்படம்..!

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi AGILAN Movie releasing on March 10th Deets

People looking for online information on Agilan, AGILAN Movie Update, Jayam Ravi, Priya Bhavani Shankar will find this news story useful.