www.garudabazaar.com

"நாடக காதலே இல்லன்னு சொல்லி".. Pa.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' குறித்து மோகன்.G

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மோகன் ஜி. இதற்கடுத்து திரௌபதி என்ற படத்தையும், பின்னர் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கி இருந்தார்.

Mohan G Opens about Pa Ranjith movie Natchathiram Nagargiradhu

Also Read | அண்ணனின் மரணம்.. அஞ்சலி செலுத்தி கொள்ளிக்கட்டை போட்ட Jr NTR.. புது பட நிகழ்வும் ஒத்தி வைப்பு ..

இதனையடுத்து மோகன்.G இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  தயாரிக்கவும் செய்துள்ளார் மோகன் ஜி.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பகாசூரன் திரைப்படம், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. பகாசூரன் திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் சூழலில், ஏராளமான சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, சமீபத்தில் Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் இயக்குனர் மோகன் ஜி அளித்துள்ளார். அதில், தனது சினிமா பயணம் குறித்து ஏராளமான விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் குறித்து பேசி இருந்த இயக்குனர் மோகன் ஜி, "தியேட்டர்ல பார்க்கல. ஓடிடில வந்ததுக்கு அப்புறம் பாத்தேன். நாடகக் காதலை வந்து வேற மாதிரி சொல்லி இருக்காங்க. நாடக காதலே ஒன்னு இல்லன்னு சொல்லி இருக்காங்கன்னு நெறைய பேர் சொன்னாங்க" என தெரிவித்தார்.

Mohan G Opens about Pa Ranjith movie Natchathiram Nagargiradhu

நீங்கள் சொன்ன விஷயத்திற்கு டைரக்ட் கவுண்டர் கொடுத்தது போல் தோன்றியதாக நெறியாளர் தனது கேள்வியை முன்வைக்க, இதற்கு பதிலளித்த மோகன் ஜி, "எனக்கு பதில் சொல்ல படம் எடுத்திருக்காங்க. நான் தான் யாருக்கும் பதில் சொல்ல படம் எடுக்கல. எனக்கு அந்த படம் பெருசா கனெக்ட் ஆகல. அது கனெக்ட் ஆகி இருந்தா மக்களுக்கும் கனெக்ட் ஆகியிருக்கணும்ல. நிறைய Troll மெட்டிரீயலா தான் படம் மாறிச்சு. சார்பட்டா மாதிரி படம் எடுக்கக்கூடிய Craftsman, அவருக்கு பெரிய கருப்புப்புள்ளி தான் இந்த படம்" என குறிப்பிட்டார்.

அதே போல, சார்பட்டா பரம்பரை படத்தில் சில தகவல்கள் உண்மையில்லை என முன்பு கூறியதை குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தை நெறியாளர் கேட்க, இதற்கு பதில் சொன்ன மோகன் ஜி, "பின்னாடி தான் பாக்ஸர் ஆறுமுகம் அண்ணாவோட வீடு. அவரை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். அவரு எனக்கு சொல்லி இருக்காரு. சார்பட்டா பரம்பரை ஏழுமலை நாயக்கர் உருவாக்குனதுன்னு. அதே மாதிரி பாக்சிங் அதிகமா சப்போர்ட் பண்ணி இவங்களுக்கு அதிக பரிசு கொடுத்தது எம்ஜிஆர் சார் தான். அதை ரெண்டையும் வேற மாதிரி படத்துல காட்டி இருப்பாங்க. அது தான் Contrast ஆ இருந்துச்சு" என கூறினார்.

Also Read | வசூல் வேட்டையில் தனுஷ் நடித்த 'வாத்தி'.. உலகளவில் மொத்த கலெக்ஷன் ரிப்போர்ட்..!

"நாடக காதலே இல்லன்னு சொல்லி".. PA.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' குறித்து மோகன்.G வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G Opens about Pa Ranjith movie Natchathiram Nagargiradhu

People looking for online information on Mohan g, Natchathiram Nagargiradhu, Pa Ranjith will find this news story useful.