"சமூக பொறுப்போட படம் எடுத்த மோகன் ஜி தான் உண்மையான கலைஞன்".. பேரரசு பெருமிதம்!!
முகப்பு > சினிமா செய்திகள்ருத்ர தாண்டவம் திரைப்படத்தை தொடர்ந்து மோகன்.G இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners
இவர்களுடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.
சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பகாசூரன் திரைப்படம், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றி இருந்தார்.
பகாசூரன் திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் சூழலில், ஏராளமான சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'பகாசூரன்' திரைப்படம் பார்த்த பிறகு பேசி இருந்த இயக்குனர் பேரரசு, "சினிமாவுல வந்து ஒரு மூணு வகை இருக்கு. ஜனரஞ்சகமான படம், விருதுக்கான படம், அடுத்து சமூகத்துக்கான படம். இதை மூணா பிரிச்சு தான் நம்ம பண்ணிட்டு இருக்கோம். பகாசூரன் வந்து சமூகத்திற்கான படம். இந்த படம் சம்பாதிக்கணும்னு எடுக்கல, சமூகத்துக்காக எடுத்திருக்கிறார். அந்த வகையில் பாராட்டணும்னு நினைக்கிறேன். மோகன் ஜியோட இதுக்கு முந்தைய படங்கள் ஒரு சார்பா இருக்குன்னு விமர்சனம் வந்துச்சு.
Images are subject to © copyright to their respective owners
ஆனா இந்த படம், மக்களையும், பெற்றோர்களையும் சார்ந்த படம். முக்கியமா பெண் குழந்தைகளை சார்ந்த படம். மொத்தத்துல இது சமூகத்தை சார்ந்த படம். குடும்பத்துடைய பார்க்க வேண்டிய படம்னு சொல்லுவாங்க. ஆனா உண்மையிலேயே குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம்னா அது பகாசூரன் தான். யாரு சமூக பொறுப்போடு படம் எடுக்குறாங்களோ அவங்க தான் உண்மையான கலைஞன். அப்படி உண்மையான கலைஞன் தான் மோகன் ஜி. இவர் பொறுப்போடு படம் எடுத்தா பத்தாது. இந்த படம் பாக்குறது நம்ம பொறுப்பு முதல்ல.
Images are subject to © copyright to their respective owners
பெண் குழந்தைகளுக்கு அவசியமான இந்த படத்தை அந்த பெண் குழந்தைகளை கூட்டிட்டு போய் பாக்கணும். இந்த சமூகத்துல செல்போன்னால எவ்ளோ ஆபத்து இருக்கு, இந்த சமூகம் எந்த அளவுக்கு சீரழியுது. இதெல்லாம் என்னதான் அப்பா, அம்மா பொண்ணுங்கள உக்கார வச்சு அட்வைஸ் பண்ணாலும் தலையில் ஏறாது. சினிமாவுல சொல்ற விஷயங்கள் டக்குன்னு மைண்ட்ல ஏறிடும். அதுக்கான சினிமா தான் இந்த பகாசூரன். தயவு செய்து பெத்தவங்க தங்களை குழந்தையோட போய் பகாசூரனை பாருங்க. இது மோகன் ஜிக்காகவோ, வெற்றிக்காகவோ இல்ல, உங்க குடும்ப வெற்றி. உங்க பாதுகாப்புக்கு பகாசூரன் பாக்கணும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- RK Selvamani Appreciate Mohan G Bakasuran Movie
- Popular Bollywood Director Congrats Bakasuran Movie
- SJ Suryah GV Prakash Selvaraghavan Praises Bakasuran
- Mohan G Daughter Question To Director Selvaraghavan About Movies
- Mohan G Daughter Favourite Movie Jai Bhim Exclusive
- Director Mohan G Opens Up About Movie With Actor Ajith Kumar
- Director Mohan G Wife About Her Husband Movie Critics
- Bakasuran Selvaraghavan On Mohan G And Pa Ranjith Films
- Selvaraghavan On Girls Profile Pic Opinion Bakasuran Mohan G
- Director Mohan G About His First Movie Salary
- Director Mohan G About His Salary For Directing Films
- Manjima Mohan Gautam Karthik Visit Palani Murugan Temple
தொடர்புடைய இணைப்புகள்
- "இடுப்புல யாராவது பம்பரம் விடுவாங்களா? 😡 தலை கீழ நின்னாலும் பேர மாத்த மாட்டேன்" - Mohan G Interview
- "BAKASURAN மாதிரியே படம் பண்ணுங்க Mohan.." BAKASURAN Family Audience Review
- இன்னும் Middle Class வீடு தான்.. சாமானியன் போல் எளிமை காட்டும் மோகன் ஜி..! மிரள வைக்கும் Home Tour
- Mohan G-க்கு வந்த மிரட்டல், என் புருஷன் எடுக்குற படத்துல என்ன தப்பு இருக்கு?Wife Interview Bakasuran
- இடிச்சி கட்ட 3 கோடி செலவு ஆகும்…தள்ளு வண்டி இழுத்து தாத்தா கஷ்டப்பட்டு கட்டின வீடு🥺Mohan G Home Tour
- 'Vetrimaran - Mohan G'.. சாதி இருக்கா? இல்லையா?.. இயக்குநர்கள் சொல்வது என்ன? காரசார பேச்சு
- "உன் கண்ணு உருத்துதா.." பகாசூரன் மேடையில் காவி ஏன்? செய்தியாளரிடம் சீறிய மோகன் ஜி
- அப்படியெல்லாம் சொல்லணும்னு ஆசைதான் .. Selvaraghavan Replay For Clashing With Vaathi
- "நான் எப்பயுமே வில்லன் தான்.." ராதாரவியை Reject செய்த மோகன் ஜி..! ரகசியத்தை உடைத்த பேச்சு
- "மோகன் ஜி-க்கு 2 பொண்டாட்டி".. ரகசியத்தை போட்டுடைத்த Cool Suresh..! பதறிப்போன பகாசூரன் இயக்குனர்
- "செல்வராகவன் உசுர கொடுத்து நடிச்சிருக்கிறார்" மேடையிலேயே பாராட்டிய ராதாரவி | Bakasuran | Radha Ravi
- "Song வேணுமா Song இருக்கு.. Fight வேணுமா Fight இருக்கு".. Dil Raju Style-லில் பேசிய Cool Suresh