www.garudabazaar.com

சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண்.. தெலுங்கில் ரிமேக்காகும் சூப்பர்ஹிட் தமிழ்ப்படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Vinodhaya Sitham Telugu Remake official pooja happened today in Hyderabad

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அனைவரையும் சிரிக்கவெச்ச பிரபல நடிகை மரணம்.. அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்!!

ஜீ5 ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த “விநோதய சித்தம்” திரைப்படத்தை சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். “விநோதய சித்தம்” படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்தனர்.

Vinodhaya Sitham Telugu Remake official pooja happened today in Hyderabad

Images are subject to © copyright to their respective owners.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்திருந்தார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்திருந்தார். ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13,2021  அன்று ஜீ5 தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vinodhaya Sitham Telugu Remake official pooja happened today in Hyderabad

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் சமுத்திரக்கனி இயக்க உள்ளார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் & அவருடைய   மாப்பிள்ளை சாய் தரம் தேஜ் இணைந்து இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. People's Media Factory நிறுவனம் இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கிறது.

Vinodhaya Sitham Telugu Remake official pooja happened today in Hyderabad

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இந்த படம் பற்றிய அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

Also Read | DADA பாத்துட்டு போன் பண்ணிய தனுஷ்.. கவின் பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்..!!

தொடர்புடைய இணைப்புகள்

Vinodhaya Sitham Telugu Remake official pooja happened today in Hyderabad

People looking for online information on Hyderabad, Vinodhaya Sitham, Vinodhaya Sitham Telugu Remake will find this news story useful.