'12 வருஷத்துக்கு முன்னாடி இதே செட்டில்...' சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்து பகிர்ந்த பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'உன்னாலே உன்னாலே', 'வாரணம் ஆயிரம்' உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் சதீஷ். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவின் நண்பராக ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sathish Shares his nostalgia in Sivakarthikeyans Hero Set

'உன்னாலே உன்னாலே' படத்தில் ஜூன் போனால் பாடலில் சதீஷ் நடனமாடியிருந்தார். ஜீவா இயக்கியிருந்த அந்த படத்தின் பாடலுக்கு ராஜூ சுந்தரம் நடனம் அமைத்திருந்தார்.

தற்போது அவர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ஹீரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. 

இதுகுறித்து சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 வருடங்களுக்கு முன் 'உன்னாலே உன்னாலே' படம் இங்கு படமாக்கப்பட்டது. இன்று நான் நடன இயக்குநராக இங்கு இருக்கிறேன். ஜீவா சாருடைய மேஜிக். என்று பகிர்ந்துள்ளார்.