நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Mr.லோக்கல் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் ‘SK14’, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘SK 16’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘SK 17' என அடுத்தடுத்து திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் மோகன். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.