''படம் சரியா போல. ஆனா...'' உணர்ச்சிவசப்பட்ட சிவகார்த்திகேயன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கனா' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. இந்த படத்தில் சின்னத்திரை பிரபலம் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார்.

Sivakarthikeyan speaks about Nenjamundu Nermayundu Odu Raja and Mr.Local

இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆர்ஜே விக்ணேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், 'ஜெய்க்கும் போது ஒரு அணியா நிற்குற மாதிரி தெரியும். தோற்கும் போது  தான் தனியா நிற்குறோம்கிறது புரியும்.

ஆனா தோற்கிறதோ தனியா நிற்கிறதோ பிரச்சனையில்ல. நிற்கிறோம்கிறது தான் பிரச்சனை. நான் நிற்கிறேன். படம் சரியாக போல. ஆனா அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. இதெல்லாம் ஒரு கேம் தான். ஒரு மேட்சுல அவுட்டாயிட்டோம் தோத்துட்டோம் அப்படினா அந்த மேட்சு தான் முடியும் லைஃப் முடியாது.

நான் பன்ற படங்கள் கூட என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாகத்தான் இருக்கும். நான் லாஸ்ட் பண்ண படம் கூட என்னுடைய தயாரிப்பாளருக்கு பிராஃபிட் தான். அத பத்தி பேச வேண்டாம்' என்றார்.

''படம் சரியா போல. ஆனா...'' உணர்ச்சிவசப்பட்ட சிவகார்த்திகேயன் வீடியோ