சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் இணைந்த பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘Mr.லோக்கல்’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்,‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் SK14 சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan's HERO team begins next schedule with a song choreograph by Sathish

24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இதனிடையே, ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் பிசியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பாடல் காட்சியுடன் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.  இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குநரும், விஜய் டிவி பிரபலமும், சிவகார்த்திகேயனின் நண்பருமான சதீஷ் நடனம் அமைக்கிறார். இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.