‘இதை யாரும் ட்ரை பண்ண வேணாம்’ - ஆபத்தான ஸ்டண்ட்டை அசலாட்டாக செய்த இந்த ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தான் செய்த ஹெலிகாப்டர் ஸ்டண்ட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

'Do NOT Try This On Your Own,' Akshay Kumar Shares a picture of hanging off a helicopter for Sooryavanshi

ரோகித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தில் அக்ஷய் குமார் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பாங்காக்கில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பைக் சேசிங் சீன் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அதைத் தொடர்ந்து நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பைக்கில் செல்லும் ரோகித் ஷெட்டியை துரத்துவது போல் ஹெலிகாப்டரில் அசால்ட்டாக தொங்கியபடி ஆபத்தான ஸ்டண்ட் காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அவரது ட்வீட்டில், சாதாரணமாக ஹெலிகாப்டரில் தொங்கியபடி... சூர்யவன்ஷி செட்டில் மற்றொரு நாள். இதை யாரும் முயற்சிக்க வேண்டாம். இது அத்தனையும் கைத்தேர்ந்த ஸ்டண்ட் கலைஞர்களின் மேற்பார்வையில் படமாக்கப்பட்டது’ என ட்வீட் செய்துள்ளார்.

‘சூர்யவன்ஷி’ படத்தை தவிர, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காஞ்சனா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘லக்ஷ்மி பாம்ப்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.