விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் இந்த பாலிவுட் ஹீரோயின் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக, அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

Kiara Advani to act in Sivakarthikeyan and Vignesh Shivan

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடபெற்றுவருகிறதாம்.

தயாரிப்பாளர்கள் தரப்பு இந்த படத்தை பெரிய அளவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாம். அதன் காரணமாக பாலிவுட் பிரபலங்களை இந்த படத்தில் நடிக்கவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இரண்டு ஹீரோயின்கள் உள்ள இந்த படத்தில் மற்றொரு ஹீரோயின் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக கியாரா அத்வானி, தோனியின் வாழ்க்கை வரலாறாக உருவாக்கப்பட்ட 'எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் பாலிவுட் ரீமேக்கான 'கபீர் சிங்'  படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.