‘கனா’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவதாக உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் காமெடி கலந்த அரசியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த டிரைலரின் மூலம் படத்தில் சமூக பிரச்சனை பற்றி பேசப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஷபிர் இசையமைத்துள்ள இப்படத்தில் படத்தில் இருந்து இண்டர்நெட் பசங்க என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
‘மக்கள்னா யாரு?’- கடும் அரசியல் விமர்சனங்களுடன் வெளியான சிவகார்த்திகேயன் பட டிரைலர் வீடியோ