நடிகை கீர்த்தி சுரேஷுக்காக களமிறங்கும் சமந்தா, திரிஷா... என்ன விஷயம் தெரியுமா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 'பொன்மகள் வந்தாள்' நேரடியாக OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'பென்குயின்' படமும் நேரடியாக அமேசான் பிரைமில் வரும் ஜூன் மாதம் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது.

கீர்த்தி சுரேஷுக்காக களமிறங்கும் சமந்தா, திரிஷாSamantha and Trisha does this for Keerthy suresh

இதனையடுத்து இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது. முன்னணி நடிகைகளான திரிஷா, சமந்தா, டாப்சி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் நடிகை கீர்த்தி சுரேஷுக்காக களமிறங்கி உள்ளனர். இவர்கள் நால்வரும் தனித்தனியே நான்கு மொழிகளில் இந்த படத்தின் டீசரை நாளை மதியம் 12 மணிக்கு ரிலீஸ் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரில்லர் படமான 'பென்குயின்' ரசிகர்களிடையே நல்ல ஆவலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷுக்காக களமிறங்கும் சமந்தா, திரிஷாSamantha and Trisha does this for Keerthy suresh

People looking for online information on Keerthy Suresh, Penquin, Samantha, Trisha will find this news story useful.