சிம்புவுக்கு திருமணம்?....லண்டன் பெண்ணை மணக்கிறாரா?... இயக்குனர் டி.ராஜேந்தர் அவசர அறிக்கை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் பிரபல இயக்குனர் டி.ராஜேந்திரின் மகன் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தனது திறமையாலும் எதையும் ஒளிவு மறைவு இன்றி பேசும் அவரது குணத்தினாலும், ஒரு இளைஞர் பட்டாளத்தையே தனக்கு ரசிகர்களாக வைத்திருக்கிறார்.

சிம்புவுக்கு திருமணம் பற்றி டி.ராஜேந்தர் அறிக்கைDirector T.Rajendar on simbu marrying london girl

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். சிம்புக்கு  அவரது வீட்டார் தீவிரமாக பெண் பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது ஒரு செய்தியை தீயாய் பரவி வருகிறது.

நடிகர் சிம்பு லண்டனில் வசிக்கும் கோடீஸ்வரர் வீட்டு பெண் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளிவருகின்றன. மேலும் அவர் சிம்புவின் தூரத்து உறவினர் என்றும் கூறப்பட்டது. இந்த செய்தியினால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபற்றி இயக்குனர் டி.ராஜேந்தர் ஒரு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிம்புவுக்கு திருமணம் பற்றி டி.ராஜேந்தர் அறிக்கைDirector T.Rajendar on simbu marrying london girl

People looking for online information on Marriage, Simbu, T.Rajendar will find this news story useful.