லண்டன் கோடீஸ்வரர் வீட்டு பெண்ணை மணக்கிறாரா, நடிகர் சிம்பு? - தீயாய் பரவும் செய்தி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் பிரபல இயக்குனர் டி.ராஜேந்திரின் மகன் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தனது திறமையாலும் எதையும் ஒளிவு மறைவு இன்றி பேசும் அவரது குணத்தினாலும், ஒரு இளைஞர் பட்டாளத்தையே தனக்கு ரசிகர்களாக வைத்திருக்கிறார்.

கோடீஸ்வரர் வீட்டு பெண்ணை மணக்கிறாரா சிம்புIs Simbu To marry London Based Girl Soon

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். சிம்புக்கு  அவரது வீட்டார் தீவிரமாக பெண் பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது ஒரு செய்தியை தீயாய் பரவி வருகிறது.

நடிகர் சிம்பு லண்டனில் வசிக்கும் கோடீஸ்வரர் வீட்டு பெண் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளிவருகின்றன. மேலும் அவர் சிம்புவின் தூரத்து உறவினர் என்றும் கூறப்பட்டது. இந்த செய்தியினால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த செய்தி உண்மைதானா என்பது பற்றி விசாரித்தபோது சிம்புவுக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில் இந்த செய்தி உண்மையில்லை என்று தெரிவித்துள்ளனர்

கோடீஸ்வரர் வீட்டு பெண்ணை மணக்கிறாரா சிம்புIs Simbu To marry London Based Girl Soon

People looking for online information on Marriage, Simbu, T.Rajendar will find this news story useful.