RIP - நடிகை மேக்னா ராஜின் கணவரும், பிரபல இளம் நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மரணம் அடைந்தார்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமா உலகில் பல துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் அடுத்தடுத்த மரணிக்கும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அப்படி ஒரு செய்தி தற்போது திரையுலகினரை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மரணம் Young Actor Chiranjeevi Sarja passes away

பிரபல இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தற்போது மரணமடைந்துள்ளார். இவர் கன்னட சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான, இவர் தமிழில் சில படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் காரணமாக அவர் போராடியுள்ளார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். அவரது மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இளம் நடிகரின் மரணம் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மரணம் Young Actor Chiranjeevi Sarja passes away

People looking for online information on Arjun Sarja, Chiranjeevi Sarja, Death, Meghana Raj will find this news story useful.