தளபதி விஜய் வீட்டின் முதல் கார்... கொடுத்தது அந்த நடிகர் தானாம்...யாருக்கும் தெரியாத ரகசியம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடிப்பிற்கும் நடனத்திற்கும்  கோடிக்கணக்கான மக்கள் ரசிகர்களாக உள்ளனர். இன்று அவரது வீட்டின் முன்பு அத்தனை காரர்கள் நின்றாலும், எதையும் அவர் எளிதில் பெற்றுவிடவில்லை. அதற்கு இந்த செய்தி தான் ஒரு சான்று.

விஜய்யின் வீட்டிற்கு முதல் கார் கொடுத்த நடிகர் Popular actor to offer the first Car to Thalapathy Vijay Family

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் மூன்று படங்களுக்கு பின்பும் ஸ்கூட்டரில் தான் பயணப்பட்டு இருந்துள்ளார். ஒருநாள் அவர் ஸ்கூட்டரில் தன் மனைவி, மகனுடன் கோடம்பாக்கம் பாலத்தின் மேல் சென்று கொண்டிருப்பதை பார்த்த பிரபல நடிகர் ஜெய்சங்கருக்கு மன கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது கார்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். ஆனால் அதில் விருப்பமில்லாமல் எஸ்.ஏ.சி தயங்கவே, சரி தவணை முறையில் அதற்கான பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி தளபதி விஜய்யின் குடும்பத்திற்கு சிவப்பு கலர் FIAT கார் சொந்தமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் வீட்டிற்கு முதல் கார் கொடுத்த நடிகர் Popular actor to offer the first Car to Thalapathy Vijay Family

People looking for online information on Car, Jaishankar, Vijay will find this news story useful.