'பொன்மகள் வந்தாள்' படத்துக்கு பிறகு நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் படம் - டீஸர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து,  ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'பென்குயின்' திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வருகிற ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வருகிற ஜூன் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாம்.

மேலும் இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஈஸ்வர் கார்த்திக் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Karthik Subbaraj and Keerthy Suresh's Penguin movie teaser update | கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷின் பென்குயின் டீஸர் �

People looking for online information on Karthik Subbaraj, Keerthy Suresh, Penguin will find this news story useful.