சூர்யாவுக்காக எழுதுன ஸ்கிரிப்ட், அவருக்கு ரொம்ப பிடிச்சது'' - மனம் திறக்கும் கௌதம் மேனன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா இணைந்து நடித்திருந்த 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த குறும்படம் குறித்த விமர்சனங்கள் தான் சில நாட்களாக அதிகம் காணப்பட்டது.

'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தொடர்ச்சியாக உருவான இந்த குறும்படம் உருவான விதம் குறித்தும், தனது படங்கள் குறித்தும் இயக்குநர் கௌதம் மேனன் Behindwoods TV-க்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில் குறும்படத்தின் இறுதியில் நடிகர் சிம்பு,  கமல் & காதம்பரி என்று பெயரில் கதை எழுதுவதாக காட்டப்படும்.

அது குறித்து கேட்ட போது, 'அந்த கதை நான் ஏற்கனவே எழுதிய கதை தான். நடிகர் சூர்யாவை மனதில் வைத்து எழுதிய கதை. அதில் குறிப்பிட்ட போர்ஷன் அவருக்கு சொன்னேன். அது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அது விரைவில் நடக்கும் என்று நம்பிக்கையிருக்கிறது'' என்று தெரிவித்தார்.

சூர்யாவுக்காக எழுதுன ஸ்கிரிப்ட், அவருக்கு ரொம்ப பிடிச்சது'' - மனம் திறக்கும் கௌதம் மேனன் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Gautham Menon speaks about STR, Trisha and Suriya Film | சூர்யாவிற்காக எழுதிய கதை குறித்து மனம் திறக்கும் இயக்குநர் கௌதம் மேனன�

People looking for online information on Gautham Menon, Karthik Dial Seydha Yenn, Str, Trisha Krishnan will find this news story useful.