அட ஷூட்டிங்கே தொடங்கலை, அதுக்குள்ள டப்பிங்கா? சமந்தா என்ன பேசினார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக ஹிட் அடித்தவர் சமந்தா. திருமணத்துக்குப் பின் படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றிகரமாக வலம் வருபவர்.   

Samantha to dub for herself for web series the family man 2

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சமந்தா. தெலுங்கில் அவர் சமீபத்தில் நடித்த ஓ பேபி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

சினிமாவை passion-னோடு அணுகும் நடிகைகளுள் சமந்தாவும் ஒருவர்.  சோஷியல் மீடியாவில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் சமந்தா. லாக்டவுன் காலகட்டத்தில் தன் கணவருடனும் செல்ல நாய்க்குட்டியான ஹாஷுடனும் குவாலிட்டி டைமை செலவழித்து வருகிறார்.

தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் சமந்தா.சில நாட்களுக்கு முன் நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை ஒன்று உருவானது. அதற்கு பதிலடியாக சமந்தாவின் ரசிகர்கள் ஹாஷ்டேக் ஒன்றினை உருவாக்கி ட்விட்டரில் பெரியளவில் ட்ரெண்டிங் செய்தனர்.  

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற அவரது வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடரில் சமந்தா தீவிரவாதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தி ஃபேமிலி மேன் சீரீஸின் டப்பிங் வேலைகளில்தான் தற்போது பிஸியாக உள்ளார் சமந்தா. இந்த தொடருக்காக ஹிந்தி கற்றுக் கொண்டு சொந்தக் குரலில் பேசியிருக்கிறார் சாம். இந்த நடிப்பு பயங்கரவாதியின் இன்னொரு பரிமாணத்தை ரசிகர்கள் பார்க்கலாம் என்பது நிச்சயம். 

Samantha to dub for herself for web series the family man 2

People looking for online information on OTT, Samantha ruth prabhu, The Family Man, Web Series will find this news story useful.