''யார் உங்க கூட இருந்தாங்கனு மறந்துடாதீங்க...'' - பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து Sakshi கண்டனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறினார். தற்போது ஒளிபரப்பான முதல் புரோமோவில் பிக்பாஸ், இந்த வாரம் நடைபெறும் போட்டிகளில் யார் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம் என்று Ticket to Finale டாஸ்க் குறித்து அறிவித்தார்.

Sakshi Agarwal Condemned to contestants Kavin, Losliya, Bigg Boss 3

அதனால் இதுவரை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து விளையாடி வந்த போட்டியாளர்களிடையே இந்த வாரம் கடுமையான போட்டி இருக்கும். இதனையடுத்து 'இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது' என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து எதிர்மறை கருத்துக்களை பரப்புவதை நிறுத்துங்கள். நீங்கள் சந்திக்கும் போது செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. யார் உங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்'' என்றார்.