இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 14, 2019 03:28 PM
கடந்தவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேறி சீக்ரெட் ரூமில் இருந்தார். அவர் வெளியேறியது பிக்பாஸ் வீட்டில் இருப்பர்களுக்கு அதிரச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக வனிதா, சேரன் வெளியேறியிருக்கக்கூடாது என தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் சீக்ரெட் ரூமில் இருந்த சேரன், கவின் - லாஸ்லியா இருவரும் காதல் குறித்து உரையாடியது பற்றி கேள்வி எழுப்பியது, கவின் ஷெரினை நாமினேட் செய்ததை ஷெரினிடமே தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களால் சர்ச்சைகளில் சிக்கினார்.
இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வந்தனர். குறிப்பாக லாஸ்லியாவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவருக்கு அட்வைஸ் செய்தனர். மேலும் கவினின் நண்பர் உள்ளே வந்து கவினை கன்னத்தில் அறைந்தார். இந்த இரு நிகழ்வுகள் தான் சமூகவலைதளங்களில் பெரிதும் விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்காக கவின், ஷெரின், வனிதா, தர்ஷன், சாண்டி உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டனர். அதில் இந்த வாரம் வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் வனிதாவின் நடவடிக்கைகளை ரசிகர்கள் பெரிதும் ரசிக்கவில்லை. குறிப்பாக ஷெரின் விவகாரத்தில் அவர் நடந்து கொண்டது விமர்சிக்கப்பட்டது. மேலும் மற்ற போட்டியாளர்களுக்கு வனிதாவை காட்டிலும் ஆதரவு அதிகம் இருப்பதாக தெரிகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா? வீடியோ