பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 15, 2019 03:42 PM
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேறவுள்ள நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
![Vanitha Evicted 11th Eviction in Bigg Boss 3 Kamal Haasan Hotstar Vanitha Evicted 11th Eviction in Bigg Boss 3 Kamal Haasan Hotstar](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vanitha-evicted-11th-eviction-in-bigg-boss-3-kamal-haasan-hotstar-news-1.png)
எவிக்சனில் உள்ளவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்று கூற அதற்கு அனைவரும் தலையாட்டி மெளனம் காக்கின்றனர். இருப்பினும் இந்த வாரம் வனிதா வெளியேறிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நிகழ்ச்சிகளில் இல்லாததுபோல் வெளியேறிய ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது இல்லை. ஆனால் முதல்முறையாக அந்த வாய்ப்பை பெற்றவர் வனிதா.
அவர் கூறும் கருத்துக்கள் பல நியாயமானதாக இருந்தாலும் அவர் சொல்லும் முறை தவறு என்பதால் அவர் மீது போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லாமல் பார்வையாளர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது இவரா? வீடியோ