Bigg Boss 3: ''80 நாள்ல புரியாதது இப்போவா புரிய போது...'' - கவின் - சாண்டி இடையே பிரச்சனை
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 16, 2019 09:55 AM
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனை ஏற்றுக் கொள்ள முடியாத சேரன் வனிதாவிடம், 'இது முறையில்லை' என்று புலம்பினார்.

பின்னர் கமல்ஹாசனுடன் மேடையில் தோன்றிய வனிதா, அண்ணாத்த ஆடுறார் பாட்டுக்காக கமலுடன் ஜோடியாக நடனமாடினார். மேலும் அன்னை வனிதாவாக வெளியேறுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இன்றைய தினம்(செப்டம்பர் 16) ஒளிபரப்பான முதல் புரோமோவில் Ticket to Finale டாஸ்க்கை பிக்பாஸ் அறிவித்தார். அதன் படி இந்த வாரம் முழுவதும் போட்டிகளில் சிறந்து விளங்குபவர்கள் ஃபைனலுக்கான டிக்கெட்டை பெற்று நேரடியாக இறுதிப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது கடுமையான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. விளையாடிக்கொண்டிருக்கும் போது, சாண்டி, கவினை குறிப்பிட்டு ''இப்போ தான் அவன் கேமை ஒழுங்கா விளையாடுறான்'' என்கிறார்.
அவரிடம் தனியாக பேசும் கவின், 80 நாளில் புரியாதது இப்போ என்ன புரிஞ்சிடப்போகுது. என கோபமாக தெரிவிக்கிறார். அதற்கு சேரன், ''இதுக்குலாம் வருத்தப்படாதிங்க'' என சாண்டிக்கு ஆறுதல் தெரிவிக்கிறார்.
BIGG BOSS 3: ''80 நாள்ல புரியாதது இப்போவா புரிய போது...'' - கவின் - சாண்டி இடையே பிரச்சனை வீடியோ