POLICE STATION-ல் சிக்கிய ஒருவனை, ஜெயில் பாராட்டுக்கிறது - விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 16, 2019 11:06 AM
பயாஸ்கோப் ஃபிலிம் பிரேம்ஸ் தயாரித்து பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம் ஒத்த செருப்பு. இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய சத்யா இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார்
இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் எழுதி சித் ஸ்ரீராம் பாடிய குளிருதா புள்ள பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தை முன்கூட்டியே பார்த்த காவியத்தலைவன், அங்காடித்தெரு, ஜெயில் படத்தை இயக்கிய வசந்தபாலன் படத்தைப் பாராட்டி தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ரா.பார்த்திபன் சாரின் அழைப்பின் பேரில் ஒத்த செருப்பு திரைப்படத்தை கண்டேன். ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது மற்றும் இயக்குவது மிக பெரிய சவால். அதை உலகமெங்கும் பல்வேறு திரைஆளுமைகள் சாதித்து காட்டியுள்ளனர்.
பார்த்திபன் சார் இதை எவ்வாறு கையாண்டுள்ளார் என்று எதிர்பார்ப்பு.படவெளியீடு அறிவிப்பு வந்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு படைப்பாளியாய் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.
ஆகவே அதிக ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஒளி,ஒலி,எடிட்டிங்,இசை,வசனம்,மேக்கப் இப்படி பல தொழிற்நுட்பங்களை மிக நுட்பமாக கையாண்ட திரைப்படமாக இந்த திரைப்படத்தை நான் உணர்ந்தேன். ஆழமான விசாரணைகளை,கேள்விகளை நமக்குள் உருவாக்குகிற திரைப்படமாக படம் விரிகிறது.
சமகால அரசியலை, நடுத்தர வர்க்கனின் அன்றாட வாழ்க்கையை பார்த்திபன் சாருக்கே உண்டான நையாண்டியுடன் படம் நெடுக வசனங்களை எழுதியுள்ளார் பேசியுள்ளார்.
பார்த்திபன் சாரின் வசன அமைப்பு ஒரு கத்திக்குள் ஒரு குறும் கத்தி அதற்குள் இன்னொரு சிறிய கத்தி அதற்குள் இன்னும் ஒரு சின்னஞ்சிறிய கத்தியும் மயிலிறகுயும் இருக்கும். மிக கவனமாக படத்தை பார்க்கையில் கதையின் பல்வேறு படிமங்கள் வசனங்களில் உறைந்து கிடப்பதைக் காணலாம்.பரீட்சார்த்த முயற்சிகள் எந்தவொரு துறைக்கும் அவசியமானது. அப்படி இந்த திரைப்படம் தமிழ்த்திரைப்படங்களில் ஒரு பெரிய முன்னெடுப்பு. வாழ்த்துகள் பார்த்திபன் சார்.பல உயரிய விருதுகள் உங்கள் வாசல் வரட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.