'கவின் ரொம்ப பதட்டமா இருந்திங்க, அழுதிங்க ஆனா...' - கவின் - லாஸ்லியா விவகாரம் குறித்து கமல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா அப்பா உள்ளே வந்து கவினுடனான காதல் விவகாரம் குறித்து லாஸ்லியாவை கண்டித்தார். ஆனால் கவினுடன் உங்கள் மீது எந்த கோவமும் இல்லை என்று கூறி கேமில் வெற்றி பெற அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

Kavin, Losliya, Cheran, Vanitha Bigg Boss 3 Promo 2 Sept 14

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் கமல் ரசிகர்கள் முன் தோன்றி பேசினார். முதலில், சேரனுக்கு ரகசிய அறை, கவினுக்கு பப்ளிக்கா அறை என கலாய்த்தார்.

பின்னர் கவினிடம் பேசிய அவர், கவின், நீங்க ரொம்ப பதட்டப்பட்டிங்க, அழுதிங்க. ஆனா லாஸ்லியாவோட அப்பா உங்க மேல கோபத்தை காட்டவே இல்ல பார்த்திங்களா ? ஒரு திரில்லர் காட்சி மாதிரியே இருந்துச்சு எனக்கு. நான் ஒரு அப்பாக என்ன செய்திருப்பேனோ, அதை விட சிறப்பாகவே செய்தார். என்றார்.

'கவின் ரொம்ப பதட்டமா இருந்திங்க, அழுதிங்க ஆனா...' - கவின் - லாஸ்லியா விவகாரம் குறித்து கமல் வீடியோ