Bigg Boss 3: ''சேரனுக்கு ரகசிய அறையும், கவினுக்கு பப்ளிக்கா ஒரு அறையும்...''. - கமல் கலாய்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 14, 2019 04:54 PM
இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வந்து அவர்களை மகிழ்ச்சிபடுத்தினர். குறிப்பாக லாஸ்லியாவின் பெற்றோர் உள்ளே வந்து அவருக்கு நிறைய அறிவுரைகள் கூறினர்.

மேலும் கவினின் நண்பர் உள்ளே வந்து சில தங்களை ஏமாற்றிவிட்டதாக கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரங்கள் தான் கடந்த வாரம் முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் விஜய் டிவி புதிய புரோமோவை வெளியிட்டுள்ளது. அதில், போட்டியாளர்களிடையே தோன்றும் கமல்ஹாசன், இந்த வாரம் சேரனுக்கு ரகசிய அறையும், கவினுக்கு பப்ளிக்கா ஒரு அறையும் கிடச்சது. இரண்டும் இரண்டு விதமான அறைகள் என்று நக்கலாக தெரிவித்தார்.
BIGG BOSS 3: ''சேரனுக்கு ரகசிய அறையும், கவினுக்கு பப்ளிக்கா ஒரு அறையும்...''. - கமல் கலாய் வீடியோ
Tags : Kamal Haasan, Bigg Boss 3, Kavin, Losliya