இது எல்லாமே "தளபதி" என்ற ஒரு பேருக்காக தான் - பிகில் பற்றி பிரபலம் வெளியிட்ட ட்விட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'பிகில்' படத்திற்காக இணைந்துள்ளார்.

Rohini Theatres Rhevanth Tweet About Vijay Bigil's Pre Business

விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். சமீபத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான  பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில்  படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. அந்தவகையில் தற்போது ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ரேவந்த் பிகில் பட பிசினஸ் குறித்து டுவிட் போட்டுள்ளார். அதில், படக்குழு தரப்பில் இருந்து பிகில் பட வியாபாரம் பற்றி கேள்விப்பட்டேன், மாஸாக நடக்கிறது. இது எல்லாமே விஜய் என்ற ஒற்றை மனிதரின் பெயராலேயே நடக்கிறது என கமெண்ட் போட விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.