பிக்பாஸில் சேரன் குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 26, 2019 03:47 PM
'மூடர் கூடம்' நவீன் தயாரித்து சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் 'கொளஞ்சி'. இந்த படத்தில் மூடர்கூடம் ராஜாஜி, சங்கவி, சென்ராயன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

தன்ராம் சரவணன் இயக்கிவரும் இந்த படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் தளபதி விஜய் மற்றும் தல அஜித் குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், அமராவதி தான் எனது முதல் படம். அப்போது நான் 9 வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அஜித் நல்லா பேசுவாரு. ரொம்ப பிரெண்ட்லி. பழகுவதற்கு இலகுவானவர்.
ஆனால் விஜய் ரொம்ப ஷை டைப். ரொம்ப பேசமாட்டாரு. ஆனால் அவர்கள் நண்பர்களுடன் பழகும் போது டோட்டலாக வேறு மாதிரி பேசுவார்'' என்றார். இந்நிலையில் அவர் சேரன் இயக்கத்தில் பொற்காலம் படத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் சேரனின் செயல்பாடு குறித்து பேசிய சங்கவி, சேரன் தான் பிக்பாஸ் வீட்டில் எனக்கு தெரிந்த மனிதர். அவர் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துகள் சேரன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸில் சேரன் குறித்து பிரபல நடிகை ஓபன் டாக் வீடியோ