'' வர்லாம் வர்லாம் வா.." தளபதியின் 'பிகில்' மாஸ் அப்டேட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 26, 2019 12:42 PM
‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு அட்லி - தளபதி விஜய் இணைந்திருக்கும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கப்பெண்னே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் தளபதி விஜய், அப்பா - மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பபதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பாடல்களை விவேக் எழுதியுள்ளார். இந்த படத்தில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடவிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடும் முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, விறுவிறுப்பாக நடந்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க இருக்கிறதாம். அதன்பிறகு படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இறங்க உள்ளனர்