பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன்..! ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்களன்று ரகசியமாக கன்ஃபக்சன் அறையில் போட்டியாளர்கள் இருவரை நாமினேஷன் செய்வது வழக்கம். இந்த நாமினேஷன் ரகசியமாக நடைபெறுவதால் யார் யாரை நாமினேஷன் செய்தது என்பது தெரியாது. பலசமயம் நெருக்கமானவர்களே கூட நாமினேஷன் செய்ததுண்டு

Bigg Boss 3 Tamil Vijay Tv Promo Kamal Haasan Kavin Losliya

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக ஒப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது. இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஆப்பு அதிகரித்து கொண்டே போவதாக அபிராமி புலம்புகிறார்.

இந்த நிலையில் முதல் நபராக நாமினேஷன் செய்ய வரும் லாஸ்லியா, மதுமிதாவை நாமினேஷன் செய்கின்றார். சாண்டி பிரச்சனையில் அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்ட பின்னரும் அந்த பிரச்சனையை மிண்டும் கிளப்புவதை தான் விரும்பவில்லை என்று நாமினேஷனுக்கான காரணத்தை கூறுகின்றனர்.

மற்ற போட்டியாளர்கள் யார் யாரை நாமினேஷன் செய்கின்றனர், அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன? என்பதை இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Promo 2: இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சில விஷயங்ககள் ஓப்பனாக பேசியிருக்கலாம் என்ற காரணத்தை சொல்லி சாக்ஷி கவினை நாமினேட் செய்தார். இதை கேட்டவுடனேயே கவின் அதிர்ச்சியாக ஒரு லுக் விட்டார். பின்னர் சரவணன் மற்றும் சேரனிடம், அவள் என்னென்ன சொன்னா.. என்னென்ன பேசினான்னு எனக்கு தெரியும்.. அவ என் பெயரை சொன்னதுக்கு அப்புறம் கூட எனக்கு அவ பெயரை சொல்லணும்னு தோணல என்று கூறுகிறார் கவின்.

பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன்..! ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ