''Bigg Boss 3 வின்னர்ஸ் இவங்க தான்'' - முன்னாள் பிக்பாஸ் பிரபலம் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 04, 2019 05:22 PM
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) ஆம் தேதி பிக்பாஸ் ஃபைனல்ஸ் நடைபெறவிருக்கிறது.

முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் இந்த நால்வரில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது எவிக்ட் ஆகி சென்ற போட்டியாளர்கள் எல்லோரும் ஃபைனல்ஸ்க்காக உள்ளே வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வெளியான முதல் புரோமோவில் தர்ஷன், கவின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அவர்களை பார்த்த மகிழ்ச்சியில் சாண்டியும், முகேனும் இருவரையும் தூக்கி சுற்றுகின்றனர். இந்நிலையில் இந்த புரொமோவை பகிர்ந்த காஜல் பசுபதி, கவினும் தர்ஷனும் திரும்ப வந்துட்டாங்க. பிக்பாஸ் சீசன் 3யின் வெற்றியாளர்கள் என்று பகிர்ந்துள்ளார்.
Aweeeee kavin & Tharshan are back😍😍😍 winners of BB3 https://t.co/pyHwE01gFv
— Kaajal Pasupathi (@kaajalActress) October 4, 2019