மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'திரிஷ்யம்', தமிழில் கமலை வைத்து 'பாபநாசம்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தை ஜீத்து ஜோசஃப் இயக்கியிருந்தார். தற்போது அவர் மீண்டும் கார்த்தி, ஜோதிகாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் தீரன் அதிகாரம் ஒன்று ராட்சசன் படங்களில் நடித்து புகழ்பெற்ற அபிராமி இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளார்.
அதில், சிறப்பான இந்த படத்தல் பங்கு பெருவதில் ஆர்வமாக இருக்கிறேன். ஜோதிகா மற்றும் சத்யராஜூடன் நடிப்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். தீரன் படத்துக்கு பிறகு கார்த்தியுடன் இது எனது இரண்டாவது படம். என்றார்.