கைதியில் இருந்து விடுதலையான கார்த்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி நடிக்கும் படமானக் கைதிப் படத்தின் படப்பிடிப்பு  இறுதி கட்டத்தில் இருப்பதாகவும்  கார்த்தி இடம் பெரும் காட்சிகள் அனைத்தும் முடிந்தன என தகவல் வெளியாகியுள்ளது.

Karthi Next Movie Kaithi Directed By Lokesh Kanagaraj shoot Finished

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி, கடந்த வருடம் வெளியான கடைக்குட்டி சிங்கம் மிகப் பெரும் வெற்றி பெற்று கடந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமானது. அதனையடுத்து அவர் நடிப்பில் உருவான அடுத்தப்படமான தேவ் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அவர் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடித்து வருகிறார் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இந்தப் படத்தில் கதாநாயகியே கிடையாது. இந்தப் படத்திற்கு  ‘கைதி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு  இறுதி கட்டத்தில் இருப்பதாகவும்  கார்த்தி இடம் பெரும் காட்சிகள் அனைத்தும் முடிந்தன என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழின் முதல் முழுநீள பிரிசன் பிரேக் படமாக உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.