ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடித்துவரும் படம் 'மிஸ்டர்.லோக்கல்'. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வருகிற மே 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் யோகிபாபு, ரோபோ ஷங்கர், சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் பேசிய ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன் அப்போது பார்த்து போல இப்போதும் இருக்கிறார். ஒரு காட்சியில் அவர் மட்டும் இருந்தாலே போதும். அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
ஆனாலும், இது ரோபோ ஷங்கர் சீன், இது யோகி பாபு சீன் என ஒவ்வொருத்தருக்கும் அவர்களுக்கான ஸ்பேஸ்-ஐ வழங்குகிறார். மேலும் நடனமாடும் போது ஒரு முறை பார்த்துவிட்டு அப்படியே ஆடுகிறார். இதையெல்லாம் பார்த்து வியந்து போயிருக்கிறேன்.
பிரெஸ் மீட், பிரஸ்க்கு படம் போட்டா ஏன் பின் டிராப் சைலன்ட்டில் இருக்குனு எனக்கு தெரியல. அதுனால பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடும் போது நான் வருவதே கிடையாது' என்றார். அப்போது பத்திரிக்கையாளர்களுக்கும் ரோபோ ஷங்கருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டு அடங்கியது
'காமெடிக்கு ஏன் சிரிக்க மாட்றீங்க?' - ரோபோ ஷங்கரால் ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோ