நடிகர் ராணாவும் குடும்பமும் செம ஹாப்பி - பொண்ணு ரெடி.. கல்யாண தேதி இதுதானா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராணாவுக்கு திருமணம் நடைபெறுவது பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. 

நடிகர் ராணாவின் கல்யாணம் இப்போது தான்.? | rana daggubati and miheeka bajaj's marriage to happen soon

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. 

இந்நிலையில் ராணா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கமிட் ஆகியிருப்பதை பதிவு செய்தார். இவர் ஆர்க்கிடெக்ட்டான மிஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். இதையடுத்து இருவரின் திருமணத்தையும் டிசம்பரில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவரது தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார். ''இருவரின் திருமணத்தையும் டிசம்பர் அல்லது அதற்கு முன்னர் நடத்த வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் உறுதியான பின் கண்டிப்பாக நாங்களே தெரிவிப்போம். இப்போதைக்கு, இந்த கடினமான சூழ்நிலையில், இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது' என அவர் தெரிவித்துள்ளார். 

Entertainment sub editor