"அந்த ரெண்டு பேருக்கும் 'அந்த' மாதிரி தண்டனை கொடுங்க" - நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கொந்தளிப்பு..!
முகப்பு > சினிமா செய்திகள்விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த சிறுமதுரை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ. பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கலியமூர்த்தி மற்றும் முருகன் இருவரும் முன்விரோதம் காரணமாக சிறுமியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
வலி தாங்க முடியாமல் கதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி தற்போது இறந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த வகையில் புகழ்பெற்றது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும், அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம்? ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா?
முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவி சிறுமிக்கும், மகளைப் பறிகொடுத்துப் பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்.
அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை கட்சியை விட்டு நீக்குவதோ, கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது"