"சிம்புவின் மனைவிக்காக வெயிட்டிங்.." - பிரபல பிக்பாஸ் நடிகை போட்ட பதிவு....செம வைரல் இப்போ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா ஊரடங்கு காரணமாக சிம்பு தனது வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் அவர் சமைக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த நேரத்தில் குடும்பத்தினருக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து தருகிறார் சிம்பு. அவருக்கு சமையல் கற்றுக் கொடுத்தவர் நடிகர் விடிவி கணேஷ் தான்.

சிம்புவின் சமையல் வீடியோவை பகிர்ந்த பிக்பாஸ் நடிகை போட்ட பதிவு | actress bindu madhavi shares simbu cooking video with a message

சமைத்துக்கொண்டே இருவரும் பேசிக்கொள்ளும் ஒரு வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் விடிவி கணேஷ் கூறும்போது "வரப்போகும் மனைவிக்கு சமைக்கும்  வேலையே இருக்காது போல" என்று கூற, நடிகர் சிம்பு ஆவேசமாக "வர போகிறவள் என் வாழ்க்கை துணை. எப்பவும் சந்தோஷமா இருக்கணும். நான் உங்கள மாதிரி இல்லை" என்று ஜாலியாக வாக்குவாதம் செய்கிறார்.

இந்நிலையில் நடிகை பிந்து மாதவி அந்த வீடியோவை ஷேர் செய்து பதிவிட்டுள்ளார். நடிகர் சிம்புவும் நடிகை பிந்து மாதவியும் 10 வருட நெருங்கிய நண்பர்கள் என்பது பலரும் அறியாத விஷயம். இது பற்றி அவர் கூறும் போது "சரியாக சொன்னாய் சிம்... நாங்களும் அவங்கள பார்க்க ஆவலா இருக்கோம்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது STR ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Entertainment sub editor