'நம்பர் கேட்ட ரசிகருக்கு, டிடி கொடுத்த ரிப்ளை'' - இந்த பதிலை எதிர்ப்பார்த்திருக்க மாட்டாங்க.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

ரசிகருக்கு ஆங்கர் டிடி கொடுத்த செம ரிப்ளை | anchor dd gives a cute reply to a fan in her question answer session

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் இவர் பிரபலமானார். நிகழ்ச்சிகளில் இவரது கலகலப்பான பேச்சுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், 'உங்க ஃபோன் நம்பர் கிடைக்குமா.?' என கேள்வி கேட்க, அதற்கு டிடி, 'கிடைக்கும், ஆனா பில்லையும் நீங்கதான் கட்டனும்' ஒரு எதிர்ப்பார்க்காத பதிலை க்யூட்டாக கொடுத்தார். மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தனது இத்தனை வருட ஆங்கரிங் அனுபவம், த்ரிஷா, நயன்தாரா, அனிருத் உள்ளிட்டோரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 

 

Entertainment sub editor