'இது உங்களுக்கு கம்பேக் படமா இருக்கும்' - பிரபல ஹீரோவின் படத்தை பாராட்டிய 'பேட்ட' இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Petta director Karthik Subbaraj tweets about Bharath's Kalidas

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''காளிதாஸ்' படத்தை காணுகின்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் உருவாக்கம் கவனம் ஈர்த்தது. சீட் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய கிரைம் திரில்லர்.

இந்த படம் நடிகர் பரத்திற்கு கம்பேக் படமாக இருக்கும்.  இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீநிவாசன் மற்றும் இயக்குநர் ஸ்ரீசெந்தில் ஆகியோருக்கும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் இந்த படம் வெற்றியைடைய வாழ்த்துகள் என்றார். 

நடிகர் பரத் நடித்துள்ள 'காளிதாஸ்' திரைப்படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு விஷால் சந்திர சேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக இனியா நடத்துளள்ளார்.