www.garudabazaar.com

மனைவியுடன் வெளிநாட்டில்.. இது தல கிறிஸ்துமஸ்.. புதுமாப்பிள்ளை ஹரிஷ் கல்யாண்.. 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரிஷ் கல்யாண்,  தனது மனைவியுடன் வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Harish Kalyan Narmada Udayakumar at Prague Czech Republic

Also Read | The Teacher : தப்பு செய்தவர்களை தேடி பழி வாங்கும் அமலா பால் .. ஓடிடியில் வெளியான 'தி டீச்சர்' .!!

பிக்பாஸ்  முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு மற்றும் ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

சிலநாட்களுக்கு முன் நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை ஹரிஷ் கல்யாண் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.

சென்னை திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் மஹாலில் இந்த திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் செக் குடியரசு நாட்டின் ப்ஃராக் நகரில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தனது மனைவி நர்மதாவுடன் தேவாலய வாசலில் கிறிஸ்துமஸ் மரம் & நட்சத்திர பிண்ணனியில் எடுத்த புகைப்படங்களாக இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளது. ஹரிஷ் கல்யாண், "உங்கள் அனைவரையும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்த  இதை விட சிறந்த பதிவு இருக்க முடியாது" என தலைப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது ஹரிஷ் கல்யாண் 'டீசல்' என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்  இந்த படத்தில் அதுல்யா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

மேலும் சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' என்ற படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இப்படத்தில் சித்தி இத்னானி, கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

Also Read | VIDEO : தூங்குதா..? வாலைப் பிடித்த சந்தானம்.. புலி கொடுத்த ரியாக்‌ஷனில் ஜர்க் ஆயிட்டாப்ல!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Harish Kalyan Narmada Udayakumar at Prague Czech Republic

People looking for online information on Harish Kalyan, Harish Kalyan Narmada Udayakumar, Prague Czech Republic will find this news story useful.