RRR Others USA
www.garudabazaar.com

"தெலுங்கு - இந்தி சினிமால இந்த ஹீரோக்களை தான் பிடிக்கும்" - மனம் திறந்த Rakul Preet Singh... செம தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: தனக்கு பிடித்த நடிகர்கள் யார் என்பதை ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ளார்.

Rakul Preet Singh about Her Favourite Bollywood Tollywood Actors

போடு..'பீஸ்ட்' படத்தின் இந்தி உரிமம்.. கைப்பற்றிய 'அண்ணாத்த' பட வினியோகஸ்தர்..! செம சம்பவம்

31 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rakul Preet Singh about Her Favourite Bollywood Tollywood Actors

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங்கும் முக்கியமானவர். சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய போட்டோவை ரகுல் பிரித் சிங் பகிர்ந்தார். அதில் அவர் மாலத்தீவில் சுற்றுலாவில் இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் நடித்த 'அட்டாக்' படத்தை விளம்பரப்படுத்த இன்ஸ்டாகிராம் லைவில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் உரையாடினார். அதில் அவருக்கு பிடித்த நடிகர்கள் குறித்த கேள்வி ரசிகர்களால் எழுப்பப்பட்டது. அதற்கு ரகுல் ப்ரீத் சிங், இந்தியில் ரன்வீர் சிங் தனக்கு பிடித்த ஹீரோ என்றும், தெலுங்கில் அல்லு அர்ஜூன் தனக்கு பிடித்த ஹீரோ என்றும் பதில் அளித்தார்.

Rakul Preet Singh about Her Favourite Bollywood Tollywood Actors

Rakul Preet Singh about Her Favourite Bollywood Tollywood Actors

'RRR' படம் பாத்துட்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் சொன்ன வைரல் கருத்து..! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Rakul Preet Singh about Her Favourite Bollywood Tollywood Actors

People looking for online information on Favourite Bollywood Tollywood Actors, Preet Singh Favourite Bollywood Tollywood Actors, Rakul Preet Singh will find this news story useful.