www.garudabazaar.com

"இந்திய சினிமாவில் MASTERPIECE".. 'காந்தாரா' படம் பார்த்து வியந்த ரஜினிகாந்த்! வைரல் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காந்தாரா படம் பார்த்த பிறகு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Rajinikanth watched and tweet about KANTARA Movie

Also Read | நடிகை பூர்ணாவின் திருமண வரவேற்பு.. நடனமாடி அசத்திய மணமக்கள்! வைரல் வீடியோ

கன்னட மொழியில் உருவாகிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது.

காந்தாரா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல  விமர்சனங்களைப் பெற்றது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும்  வெளியாகி உள்ளது.

 Rajinikanth watched and tweet about KANTARA Movie

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலேபிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.

படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

 Rajinikanth watched and tweet about KANTARA Movie

காந்தாராவில் பொல்லாதவன் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை) இசை படத்தின் இன்னொரு பெரிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், "தெரிந்ததை விட தெரியாதது அதிகம்" ஹோம்பலே பிலிம்ஸ் & கந்தாரா திரைப்படத்தை விட சினிமாவில் யாரும் இதை சிறப்பாக சொல்லியிருக்க முடியாது.

 Rajinikanth watched and tweet about KANTARA Movie

நீங்கள் என்னை புல்லரிக்க வைத்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ரிஷப் உங்களுக்கு வாழ்த்துகள். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பின் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துகள்" என ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | சர்தார் படத்தின் வெற்றி.. நடிகை ரஜிஷா வெளியிட்ட வைரல் ஃபோட்டோ.. கமெண்ட் செய்து அசத்திய லைலா!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth watched and tweet about KANTARA Movie

People looking for online information on Kantara, Rajinikanth, Rajinikanth tweet about KANTARA Movie will find this news story useful.