www.garudabazaar.com

"சர்தார் 2 வா??".. அடுத்தடுத்து 'Sequel'.. வெற்றி விழா மேடையில் கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்யம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. அவர் நடித்த முதல் படமான 'பருத்திவீரன்' அவருக்கு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்து விட்டது.

Karthi three films to have sequels kaithi ps1 sardar

Also Read | Bigg boss 6 tamil : “ஜனனி பொம்மைய இதனால எடுத்தேன்.. ஆனா”.. பரபரப்பு அடங்கிய பின் ஷெரினா சொன்ன விஷயம்.!

தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் பல்வேறு வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த 'விருமன்' திரைப்படம், மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருந்த 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படத்திலும் வந்தியத்தேவன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

Karthi three films to have sequels kaithi ps1 sardar

இதனையடுத்து தீபாவளி விருந்தாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த 'சர்தார்' திரைப்படமும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றதுடன் மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்தடுத்து ஹிட் படங்களை நடிகர் கார்த்தி கொடுத்து வருவதால் அவரது ரசிகர்களும் குதூகலத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள சில திரைப்படங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் அதிகம் வலம் வந்த வண்ணம் உள்ளது.

Karthi three films to have sequels kaithi ps1 sardar

பொதுவாக இன்றைய காலத்தில் ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது என்பது பல இந்திய மொழிகளில் நடைபெற்று வரும் ஒன்று தான். அந்த வகையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக மூன்று திரைப்படங்களின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகியிருந்தது. இதற்கு அடுத்தபடியாக இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திலும் கார்த்தி நடித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி விருந்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த 'கைதி' திரைப்படம் வெளியாகி இருந்தது. முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், அதிரி புதிரி ஹிட்டாகவும் மாறி இருந்தது.

Karthi three films to have sequels kaithi ps1 sardar

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு உருவாகும் என சர்தார் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். அதேபோல சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இப்படி கார்த்தி நடித்த படங்களின் இரண்டாம் பாகங்கள், அடுத்தடுத்து உருவாக உள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | Bigg boss 6 tamil : இதென்ன பிரமாதம்.. 5வது சீசன் பொம்மை டாஸ்கை மறக்க முடியுமா? நினைவலையில் நெட்டிசன்கள்.!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi three films to have sequels kaithi ps1 sardar

People looking for online information on Kaithi Tamil, Karthi, Sardar will find this news story useful.