www.garudabazaar.com

மகளுடன் சூப்பர் ஸ்டாரை சந்தித்த 'பொன்னியின் செல்வன்' நடிகர்.. வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பொன்னியின் செல்வன் நடிகர் சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Varalaxmi Sarathkumar Meet Superstar Rajinikanth

பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள சரத்குமார் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.‌

Varalaxmi Sarathkumar Meet Superstar Rajinikanth

அதில், மிகச் சிறந்த நாள். ரசிகையின் தருணங்கள்.   புல்லரித்தது விட்டது. என்னுடைய படங்கள், சினிமா வாழ்க்கை பற்றி பாராட்டி சூப்பர் ஸ்டார் பேசினார்.  அப்பா சரத்குமாரின் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் பாராட்டினார். ஒரு மணிநேரம் எங்களுடன் நேரம் செலவிட்டார். லவ் யூ சார் " என வரலட்சுமி பதிவிட்டுள்ளார்.

Varalaxmi Sarathkumar Meet Superstar Rajinikanth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார்.‌

2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட போடா போடி திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. தனது இரண்டாவது படமாக கன்னடத் திரைப்படமான மாணிக்யா (2014) படத்தில் நடிகர் சுதீப் உடன் நடித்தார். இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய கன்னடப் படங்களில் ஒன்றாக அமைந்தது.

Varalaxmi Sarathkumar Meet Superstar Rajinikanth

2014 ஆம் ஆண்டில், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை (2016) படத்தில்  கரகாட்டம் ஆடும் நடனக் கலைஞராக நடித்தார்.

2017 இல், விக்ரம் வேதா, நிபுணன், விஸ்மயா, சத்யா, காட்டு மற்றும் மாஸ்டர் பீஸ் ஆகிய படங்களில் வரலட்சுமி அடுத்தடுத்து நடித்தார். ஜெயா டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பப்பட்ட உன்னை அறிந்தால் (2018) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு  தொகுப்பாளராகவும் செயல்பட்டார்.

Varalaxmi Sarathkumar Meet Superstar Rajinikanth

சண்டக்கோழி 2 (2018) மற்றும் சர்கார் (2018) ஆகிய படங்களில் வில்லியாக நடித்திருந்தார் வரலெட்சுமி சரத்குமார். சமீபத்திய இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்களில் வரலெட்சுமி நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் தற்போது யசோதா, பாம்பன், கலர்ஸ், ஹனுமான், சபரி, பால கிருஷ்ணாவின் 107-வது படத்திலும் வரலெட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Varalaxmi Sarathkumar Meet Superstar Rajinikanth

People looking for online information on PS1, Rajinikanth will find this news story useful.