www.garudabazaar.com

இந்திய அளவில் ரசிகர்களை கவரும் "காந்தாரா".. வெளியான மிரட்டலான தமிழ் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட மொழியில் உருவாகிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30 அன்று வெளியானது.

Kantara Kannada Movie Stunning Tamil Trailer Released

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் & ரன்னிங் டைம் விவரம்!

காந்தாரா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அற்புதமான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் வசூல் வேட்டை ஆடி வரும் காந்தாரா படத்தின் தமிழ் மொழி டிரெய்லர் வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி & கிஷோர் இடையேயான மோதல் காட்சிகள் டிரெய்லரில் முக்கிய அம்சமாக உள்ளன. கிளைமாக்ஸ் காட்சியின் சில பகுதிகள் டிரெய்லரில் அமைந்துள்ளன. இந்த தமிழ் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

Kantara Kannada Movie Stunning Tamil Trailer Released

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.

இது உலகளாவிய கருப்பொருளாக இருப்பதால், படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பார்க்க மீண்டும் மீண்டும் திரையரங்குகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

Kantara Kannada Movie Stunning Tamil Trailer Released

காந்தாராவில் பொல்லாதவன் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை) இசை படத்தின் இன்னொரு பெரிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. 

Kantara Kannada Movie Stunning Tamil Trailer Released

மிக விரைவில், இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது. கேஜிஎஃப் திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஹொம்பாலே பிலிம்ஸின் இரண்டாவது தமிழ் டப்பிங் வெளியீடான காந்தாராவின் தமிழ் வெளியீட்டு தேதி மற்றும் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

 

Also Read | காதலருடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. லண்டனில் பிறந்தநாள் கொண்டாடிய வைரல் வீடியோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kantara Kannada Movie Stunning Tamil Trailer Released

People looking for online information on Kantara, Kantara Kannada Movie will find this news story useful.