www.garudabazaar.com

பேர பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. சூப்பர் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Super Star Rajinikanth Celebrate Diwali with His family

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்

Super Star Rajinikanth Celebrate Diwali with His family

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பேரன்கள் மற்றும் உறவினர்களுடன் பட்டு வேட்டி சட்டையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்சியளிக்கிறார். தனது குழந்தைக்கு பாதபூஜை செய்த புகைப்படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Celebrate Diwali with His family

People looking for online information on Aishwarya Rajinikanth, Jailer, Super Star Rajinikanth will find this news story useful.