www.garudabazaar.com

ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள ஒரு கடலோர மாவட்டத்தில் நடந்து வருகிறது.

Super Star Rajinikanth Nelson Jailer Shooting at Cuddalore

Also Read | "GP முத்து -வ..".. தனலட்சுமிக்கு Strategy சொல்லிக் கொடுத்த ஆயிஷா..? நள்ளிரவில் பரபர உரையாடல்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Super Star Rajinikanth Nelson Jailer Shooting at Cuddalore

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது.

Super Star Rajinikanth Nelson Jailer Shooting at Cuddalore

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

Super Star Rajinikanth Nelson Jailer Shooting at Cuddalore

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்றது. மகாபலிபுரத்தில் நடந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் படக்குழுவினர் உடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.  இந்நிலையில் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்நிலைகள் - பாலங்கள் அடங்கிய பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Also Read | "என் அப்பா, அம்மாக்கு அப்புறம் இப்டி பண்ணது நீங்க தான்".. உருகிய ஜிபி முத்து!!

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Nelson Jailer Shooting at Cuddalore

People looking for online information on Jailer, Jailer Shooting updates, Nelson, Nelson Dilipkumar, Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.